ஏதா அயிட்டம் சாங்கா இருக்கும்... மிரா மிதுன் மீது வெறுப்பை கக்கும் ரசிகர்கள்!

Last Updated: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (19:05 IST)
சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளதாக பிக்பாஸ் மிரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். 
 
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். எஸ்கே 16 என தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்தது. 
 
இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ”நம்ம வீட்டுப் பிள்ளை” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டரும் இன்று வெளியாகியது. 
இந்நிலையில், இந்த படத்தில் மிரா மிதுன் நடித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. ஆம், பிக்பாச் போட்டியாளராக பங்கேற்ற மிரா மிதுன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், உங்கள் வாழ்த்துக்களுடன் நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார். 
 
இந்த பதிவை கண்ட பலர், நீ எதுக்கு சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கிற? படம் ஃப்ளாப் ஆக போகுது எனவும், ஏதா சின்ன ரோலா இருக்கும் என சிலறும், இன்னும் சிலர் எதா அயிட்டம் சாங்குல நடனம் ஆடி இருக்கும் எனவும் கமெண்டுக்களில் தங்களது வெறுப்பை கொட்டியுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :