புதன், 26 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2025 (17:44 IST)

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவனின் வயிற்றை சுற்றி இரண்டு கால்கள் முளைத்திருந்தன. இதை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கு பிறக்கும்போதே வயிற்றில் இரண்டு கூடுதல் கால்கள் வளர்ந்திருந்தன. இதனால் பள்ளிக்கூடத்தில் பலர் அவனை கேலி செய்ததாகவும், மனமுடைந்த சிறுவன் படிப்பையே நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், கூடுதலாக வளர்ந்த 2 கால்களை அகற்ற எய்ம்ஸ் மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சைக்காக திட்டமிடப்பட்டு, சிறுவனுக்கு தேவையில்லாமல் இருந்த இரண்டு கால்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.
 
இரட்டையர்கள் கருத்தரிக்கும் போது, ஒருவரின் உடல் வளர்ச்சி அடையாமல், அதன் உறுப்புகள் இன்னொருவரின் உடலுடன் இணைவது கோடியில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் அரிய சம்பவம் என்று கூறப்படுகிறது.
 
சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சிறுவன் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இனி மற்ற சிறுவர்கள் போல் பள்ளிக்கூடம் செல்லலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran