திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (17:45 IST)

அமெரிக்கா செல்ல 82 ஆயிரம் மாணவர்களுக்கு விசா: தூதரகங்கள் தகவல்!

embassy
இந்த ஆண்டு மட்டும் இந்திய மாணவர்கள் 82 ஆயிரம் பேர்களுக்கு அமெரிக்காவுக்கு சென்று படிக்க விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று மேல்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா சென்று படிப்பதற்கான விசா உடனே கிடைத்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 82 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது 
 
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் விசாக்கள் அதிகம் வினியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.