1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Tsunami alert announced in Philippines

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை !

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 எனப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வர வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவில், டாவோ நகரை மையமமாகக் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இதன் ஆழம்  59 கி.மீ எனக் கண்டறியப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருந்தது. இந்தப் பூகம்பத்தால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

நிலநடுக்க சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த மகன்