செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:46 IST)

இசையமைப்பாளரை காதலிக்கிறாரா நடிகை மடோனா?

நடிகை மடோனா செபாஸ்டின் இசையமைப்பாளர் ராபி ஆபிரகானை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வருகிறது.


 
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் பிரபலம் ஆனவர் மடோனா செபாஸ்டின். இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண், ஜூங்கா ஆகிய படங்களில் நடித்தார். தனுஷ் உடன் பவர் பாண்டி படத்தில் நடித்தார். இவர் நடித்த எல்லா படங்களுமே வசூலில் பட்டையை கிளப்பின. தற்போது  கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தமிழ் படத்திலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டார். அந்த படத்தில், ‘‘சிலருடைய பக்கத்தில் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்ஷ்டம்’’ என்று பதிவிட்டுள்ளார். 
 
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மடோனா செபாஸ்டியனும், ராபி ஆபிரகாமும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.