வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2019 (16:44 IST)

மருத்துவமனையில் டிரம்ப்.. என்ன ஆனது அதிபருக்கு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மருத்துவர்கள் கிட்டதட்ட 2 மணி நேரம் உடல் பரிசோதனை செய்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சனிக்கிழமை திடீரென வால்டர் ரீட் மிலிட்டரி மருத்துவமனையில் தனது உடலை பரிசோதனை செய்துகொண்டார்.
டிரம்ப்பிற்கு கிட்டதட்ட 2 மணி நேரம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் உடல் நலத்திற்கு என்ன ஆயிற்று என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் டிரம்ப்பின் உதவியாளர் ஸ்டெஃபனி கிரிஷம், “2020-ல் அதிபர் தேர்தல் வரவிருப்பதால், அதற்கான தீவிர பிரச்சாரத்திற்கும் பயணத்திற்கும் டிரம்ப் தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆதலால் அவர் முன்னமே உடல் பரிசோதனை செய்து முடித்துக் கொண்டார்” என கூறியுள்ளார்.

மேலும், ”73 வயதான டிரம்ப், மிகவும் நலமுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் உள்ளார் என மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் தெரிவித்தனர்” எனவும் கூறியுள்ளார்.

வருகிற 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக மீண்டும் போட்டியிட டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.