செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (11:49 IST)

டிரம்ப் உதவியாளருக்கு கொரோனா: வெள்ளை மாளிகையில் பதட்டம்

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் உள்பட பல விஐபிக்களை தாக்கியுள்ள நிலையில் தற்போது வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் உதவியாளருக்கும் பரவி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு உணவு பரிமாறும் குழுவில் இடம்பெற்றிருக்கும் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இவ்வளவுக்கும் அவர் மாஸ்க் அணிந்து கையுறை அணிந்து தான் உணவு பரிமாறும் பணியில் இருந்துள்ளதாக இருப்பினும் அவரை கொரோனா தொற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் இது குறித்து எந்தவிதமான பதட்டமும் இல்லாமல், தனக்கு உணவு பரிமாறிய உதவியாளருடன் தனக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அதனால் தனக்கு கொரோனா இருக்க வாய்ப்பு இல்லை என்றும் இருப்பினும் அந்த உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார் 
 
மேலும் கொரோனா விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே அதிபர் டிரம்ப் அலட்சியமாக இருந்து வருகிறார் என்றும் மக்களின் மேல் தான் அவர் அலட்சியமாக இருக்கிறார் என்றால் தன்னுடைய பாதுகாப்பு மீதும் அவர் அலட்சியமாக இருப்பதாகவும் அமெரிக்கர்கள் கடும் கோபம் அடைந்துள்ளார் 
 
வெள்ளை மாளிகையில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பில் இருந்தும் அதை அவர் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதற்குப் பிறகாவது அவர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் கூறிய டிரம்ப், ‘வெள்ளை மாளிகையில் நான், எனது மனைவி, மகன் உள்பட அனைவரும் நலமாக உள்ளோம். நாங்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போராளிகள். எனவே வெள்ளை மாளிகைக்கு கொரோனா வந்து விட்டாலும் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்