எச்-1பி, எல்-1 விசா புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பா? இந்தியர்களுக்கு பாதிப்பா?
எச்-1பி, எல்-1 விசாக்கள் புதுப்பிக்கும் காலம் 540 நாட்கள் என்று இருக்கும் நிலையில், அதனை குறைக்க டிரம்ப் அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சியில் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை 540 நாட்களாக உயர்த்தியது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். 540 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு என்பது ஆபத்தான முடிவு என்றும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை கண்டுபிடிப்பது இது சவால் ஆனதாக மாறிவிடும் என்று குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் தற்போது டிரம்ப் அரசு மீண்டும் 180 நாட்கள் கால அவகாசத்தை கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்-1பி, எல்-1 விசாக்கள் பெரும்பாலும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். எனவே, சட்டவிரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் அரசு தொடங்கிய நிலையில், எச்-1பி, எல்-1 விசா காலத்தை புதுப்பிக்கும் கால அவகாசம் குறைக்கப்படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva