1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (09:20 IST)

58,803 பேர் கவலைக்கிடம்; மொத்த கொரோனா பாதிப்பு எவ்வளவு?

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,615,367 ஆக அதிகரித்திருக்கிறது. 
 
உலக நாடுகளில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,615,367 ஆக அதிகரித்திருக்கிறது. 
 
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 562,011 ஆக உள்ளது என்பதும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,320,988 ஆகவும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 58,803 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அதிகப்பட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 136,652 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,291,376 ஆக அதிகரித்துள்ளது.
 
அடுத்து பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 70,524 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,804,338 ஆக அதிகரித்துள்ளது.