நாளை 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய சூரிய கிரகணம்.. இந்தியாவில் காண முடியுமா?
400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய சூரிய கிரகணம் நாளை நிகழ இருப்பதை அடுத்து இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளன.
நாளை அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி பூரண சூரிய கிரகணம் நிகழ்கிறது என்றும் காலை ஏழு முப்பது மணியிலிருந்து 9 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் என்றும் இந்த முழு சூரிய கிரகணம் அடுத்ததாக 400 ஆண்டுகளுக்கு பின் தான் வரும் என்றும் எனவே பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை கண்டு களிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவில் முழுமையாக தெரியும் என்றும் கங்கன சூரிய கிரகணம் வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும் இந்த வகையான அரிய வகை சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும் என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்
Edited by Mahendran