ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:46 IST)

சிறை குளியலறையில் ரகசிய கேமரா இருந்தது - மரியா நவாஸ்

சிறையில் தன் அறையிலும் குளியலறையிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக நாவஸ் ஷெரீப்பின் மகள் மரியா நவாஸ் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாமா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னள் பிரதமர் நவாஸ் ஷெரீப்க்கு கடந்த 2018 ஆம் ஆண்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மகள் மரியம் ஷெரிப்புக்கு 7 ஆண்டுகளும் மருமகன் சப்தர்க்கு ஒரு ஆண்டும் தண்டனை விதிக்கப்பட்டது.

இதில், நவாஸ் ஷெரிப் கடந்த அண்டு ஜாமீன் பெற்று உடல் நலகுறைவால் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவன்பீல்ட் வழக்கு மற்றும் சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் துணைத்தலைவர் மரியம் நவாஸ். இவர் சிறையில் அடைக்கப்பட்டபோது, தன் அறையிலும் குளியளறையிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக நாவஸ் ஷெரீப்பின் மகள் மரியா நவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.