திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (15:50 IST)

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி… அரசியல் தெளிவற்றவர் – அமெரிக்க முன்னாள் அதிபர்

அமெரிக்கா நாட்டின் முன்னாள் அதிபரும் கல்வியாளருமான ஒபாமா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அரசியல் தெளிவற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.

வல்லரசு நாடான அமெரிக்காவில் இருமுறை அதிபராகப் பதவிவகித்தவர் ஒபாமா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். A Promise Land என்ற புத்தகம் குறித்து அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் ஒரு தலையங்கள விமர்சனம் எழுதியுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல்காந்தி பதற்றமானவரும் அரசியல்தெளிவில்லாதவர் எனக் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், ராகுல்காந்தி ஒரு ஆசிரியரிடம் பாடத்தை ஒப்பிவிக்கும் மாணவரைப் போலவே உள்ளதாகவும் ஒரு விஷயத்தை அறிவதில் ஆர்வம் இல்லாதவராகவும் உள்ளதாக அம்ரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளதாகக் கூறியுள்ளது.