டேட்டிங் செய்ய 5,000 மைல்கள் பயணித்த பெண்!
இந்த உலகில் புதிய புதிய சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருவருடன் நட்பை தொடங்கவும், அந்த நட்பை புதுப்பிக்கவும் செய்ய இன்றைய காலத்தில் பல சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன.
அதையும் தாண்டி சிலர் நேரில் நட்பு கொள்ள முயற்சி செய்கின்றனர். அதன்படி, லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சான்பிரான்ஸிஸ்கோ வரை சுமார் 5 ஆயிரம் மைல்கள் பயணித்து, ஒரு ஆணுடன் டேட்டிங் செய்ய சென்றுள்ளார்.
அங்கு நேரில் சென்றபோதுதான் தெரிந்தது, அந்த ஆண் நபர் தன்னைவிட அதிக நேரம் செல்போனில் செலவிடுவதால் அவர் தனக்கேற்றவர் இல்லை என எண்ணி, டேட்டிங் சென்ற பெண் அவருடன் நண்பராக இருக்க முடிவெடுத்து, அதை அவரிடமும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இதுபற்றி பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.