திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (20:09 IST)

த.வெ.க-ல் பொறுப்பாளர் குழுவில் ஒரு பெண் நிர்வாகி கட்டாயம்-! விஜய் முடிவு

Vijay
மகளிர் தினத்தன்று உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகும் இதுகுறித்து விஜய் முக்கிய முடிவெடுத்துள்ளார்.
 
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கட்சியைத் தொடங்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 
வரும் மக்களவை தேர்தல் போட்டியில்லை என்றும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல்தால் இலக்கு என்று விஜய் அறிவித்திருந்தார்.
 
ஆனால் பொது பிரச்சனைகளுக்கு விஜய் கருத்துகள் கூறுவதில்லை என்று ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் கட்சியை வலுப்படுத்தும்  நோக்கில் தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தமிழக வெற்றி கழகம்  இலக்கு  நிர்ணயித்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் ஆன்லைன் செயலி மூலம்  உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என தெரிகிறது.
 
அதன்படி, வரும் மார்ச் 8 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின்  உறுப்பினர் சேர்க்கை  தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது. மகளிர் தினத்தன்று உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
 
இதனால், மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில்  நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் குழுவிலோ அல்லது சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் குழுவிலோ ஒரு பெண் நிர்வாகி கட்டாயம் இருக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவெடித்துள்ளதாக கூறப்படுகிறது.