1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (20:45 IST)

1,600 லிட்டர் தாய்பாலை தானம் செய்த பெண்!

america
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எலிசபெத் இதுவரை 1600 லிட்டர் தாய்பாலை தானம் செய்துள்ளார்.
 

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் எலிசபெத். இவர், தன் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய் இல்லாத குழந்தைகளுக்கும் தாய் பால் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் வசிப்பவர் எலிசபெத். இவர்,  ஹைப்பர்லாக்டேசன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது சராசரி தாய்பால் சுரப்பை விட சுமார் 8 முதல் 10 மடங்களு அதிகமாக பால் சுரக்கிறது.

இவர், ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கும் பால் உற்பத்தி செய்வதாகவும், இதனால் பல குழந்தைகளின் பசியைப் போக்குவதாக கூறப்படுகிறது.

2 குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 1600 லிட்டர் தாய்பால் ஒரு வங்கிக்கு நன்கொடை அளித்துள்ளார். இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.