ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (09:33 IST)

கத்தார் முயற்சிக்கு கிடைத்த வெற்றி; போரை நிறுத்தும் இஸ்ரேல்! பணையக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்!

Hamas
இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையேயான போரை நிறுத்த கத்தார் முயற்சித்து வந்த நிலையில் ஒரு தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது.



இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பின் ஆதிக்கம் நிறைந்த காசா பகுதி மீது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல் பாலஸ்தீனிய மக்கள் பலரும் பலியாகியுள்ளனர்.

இரு தரப்பிடையே போரை நிறுத்த பல நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்கா ஆதரவுடன் கத்தார் தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வந்தது. அதில் இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் படை பிடித்து சென்ற பணைய கைதிகளை விடுவிக்க கோரிக்கை இஸ்ரேல் தரப்பில் வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இஸ்ரேலிய பணைய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் பணைய கைதிகளை வெளியேற்றுவதற்காக 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் ஹமாஸ் தான் பிடித்து வைத்துள்ள பணைய கைதிகளில் 240 பேரில் முதற்கட்டமாக 50 பேரை மட்டுமே விடுவிக்கிறது. பதிலுக்கு 150 பாலஸ்தீன் கைதிகள் இஸ்ரேலால் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K