1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (19:36 IST)

கொரோனாவால் ஏற்பட்ட சின்னச்சின்ன நன்மைகள்!

கொரோனாவால் ஏற்பட்ட சின்னச்சின்ன நன்மைகள்!
ஒரு பிரச்சனை வரும் போது தான், மனிதன் தனது பழைய நினைவுகள் எல்லாம் நினைத்துப் பார்ப்பதுண்டு. எந்நேரமும் பிசியாக இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் திடீரென நாட்கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான் 
 
கொரோனாவால் 24 மணி நேரமும் பிஸியாக பணி செய்து கொண்டிருந்தவர்கள் கூட தற்போது வீட்டிலேயே 24 மணி நேரமும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மறந்து போன பல விஷயங்களை மனிதர்கள் தற்போது தூசி தட்டி எழுப்பி வருகின்றனர் 
 
வீட்டில் சமைக்காமல் உணவகத்திலும், துரித உணவகத்தில் ஆர்டர் செய்தும் சாப்பிட்டு வந்த பலர் தற்போது வீட்டில் பாரம்பரிய உணவுகளை சமைக்க தொடங்கியுள்ளனர். மேலும் உடற்பயிற்சி யோகா ஆகியவற்றை கிட்டத்தட்ட மறந்தே போன பலர் தற்போது நேரம் அதிகம் இருப்பதால் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர் 
 
சிலர் வீட்டின் காம்பவுண்ட்டுக்குள் சைக்கிள் பயிற்சியும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட திறமை ஒளிந்து கிடக்கும் ஓவியம், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை ஆகியவை இதுவரை பிசியின் காரணமாக தூங்கிக் கிடந்த நிலையில் தற்போது இந்த திறமைகள் வெளியே வந்து கொண்டிருக்கிறது ஆம் தற்போது முழு நேரமும் ஓய்வாக இருப்பதால் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருவதாகவும் தங்கள் திறமையை தங்கள் குழந்தைகளுக்கும் அவர்கள் கற்றுக் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மனித இனத்தையே அழிக்கும் அளவுக்கு கொரோனாவால் பல தீமைகள் இருந்தாலும் சின்னச் சின்ன நன்மைகளும் இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது