குழந்தைகள் , பெரியோர் வீட்டிலேயே இருக்க மத்திய அரசு உத்தரவு !

coronavirus
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு !
sinoj kiyan| Last Updated: வியாழன், 19 மார்ச் 2020 (18:10 IST)

இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் 10 வயதிற்குட்பட்டோர் வீட்டிலேயே இருக்க மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கான ரயில், விமான கட்டண சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :