திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2022 (23:20 IST)

கிரிஸிக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து....15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

turkey -rufugy
துருக்கியின் இருந்து கிரீஸுக்கு அகதிகள் தப்பிச் செல்லுகையில், பாறையில் படகு மோதி  கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

துருக்கில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு அகதிகள் தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட அகதிகள்  2 படகுகளில்  நேற்று தப்பிச் சென்றனர்.

அப்போது, கடலில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியதால், 2 படகுகளும் கழிந்தது. இதில், பயணித்த பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர், அங்கு சென்று, 30 பேரை மீட்டனர்.

மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரைத் தேடும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Edited by Sinoj