வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:04 IST)

பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து ..7 பேர் மாயம்

brahmaputra drown
பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் இன்று 29 பயணிகளுடன் ஒரு படகு சென்றது. பாஷானிர் பகுதியில் உள்ள பாலத்தின் தூண் மீது இப்படகு மோதியதால் ஆற்றில் கழிந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்து,. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், ஆற்றில் விழுந்த மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 22 பேர் மீட்கப்பட்டனர். 7 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆற்றில் படகு கவிழ்ந்த விபதில், காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.