வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (11:39 IST)

தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை! – ஈகுவடாரில் அதிர்ச்சி!

Ecuador
ஈகுவடார் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரத்திற்கு சென்ற வேட்பாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடாரின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் பதவி வகித்து வருகிறார். ஈகுவடார் நாட்டில் போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஈகுவடாரில் விரைவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு பெர்னாண்டோ விலாவிசென்சியா என்பவரும் தீவிரமாக போட்டியிட்டு வந்தார். இதற்காக பல பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அவர் நேற்று தலைநகர் குவிட்டோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென தோன்றிய மர்ம நபர் பெர்னாண்டோவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பெர்ணாண்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஈகுவடாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலையை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K