புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (15:12 IST)

ஈக்வடாரில் பயங்கர நிலச்சரிவு - 16 பேர் பலி

ecuvator
தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்அமெரிக்க நாடான ஈக்டாரில் உள்ள குயாயாஸ் நகரில் சமீபத்தில் சக்தி வாய்ந்த  நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானதாக வல்லுனர்கள் கூறினர். இந்த  நில நடுகத்தில் சிக்கி சுமார்14 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்தச் சோகம் மறைவதற்குள், தற்போது மற்றோரு சம்பவம்  நடந்துள்ளது.

இங்குள்ள சிம்பொரொசா மாகாணம் அலுசி கண்டோன் நகரின் மலைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு  நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மீட்புக்குழுவினர் வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்குள், 16 பேர் பலியாகினர். 16 பேர் காயமடைந்த நிலையில், இவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.