ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (15:06 IST)

பிரபல பாடகி உட்பட 3 இளம்பெண்கள் ஓட ஓட விரட்டிக் கொலை!

ஈக்வடார் நாட்டில் குயினேட் கடற்கரையில் 3 இளம்பெண்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஈக்வடார் நாட்டின் குயினேட் கடற்கரைக்கு மீனவர்கள் வந்தனர். அவர்களின் நாய் ஒன்று அங்கு கடற்கரை ஓரத்தில் இருந்த பகுதியைத் தோண்டி 3 இளம்பெண்களின் சடலத்தைக் கண்டுபிடித்தது.

இதுகுறித்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 3 பெண்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேசத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சில நாட்களுக்கு முன்  இந்தக் கடற்கரையில் உல்லாசப் பயணம் மேற்கொள்ள வந்த 3 இளம்பெண்களை சில ரவுடிகள் துரைத்தியுள்ளனர். இதனால் பயந்த பெண்கள் தங்கள் தோழிக்கு சமூக வலைதளம் மூலம் தகவளித்தனர்.

கடைசியில் 3 பேரும் அடையாளம் தெரியாத  நபர்களா கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த 3 பெண்களில் ஒருவர் நயேலி, இவர் ஒரு பாடகர் மற்றும் திருமணம் ஆனவர் ஆவார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.