மனைவியுடன் கள்ள உறவுவைத்திருந்த போலீஸ்காரரின் மூக்கு அறுப்பு
தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த காவலரின் மூக்கை அறுத்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணம் ஜங் மாவட்டத்தில் வசிப்பவர் போலீஸ்காரார் காசிம் ஹயத். இவர், அப்பகுதியைச் சேர்ந்த இப்திகர் என்பவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இருவரும் தனியே இருந்தபோது, எடுத்த புகைப்படங்களை காட்டி, பெண்ணிடம் பணம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அப்பெண் தனது கணவர் இப்திகரிடம் கூறியுள்ளார்.
.
இப்திகர் இதுகுறித்து போலீஸில் புகாரளித்தார். ஆனால், இதுகுறித்து போலீஸார் நவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்திகா, தன் நண்பர்களுடன் சேர்ந்து, காசிமை கடத்திச் சென்று, அவரது காது, மூக்கு, உதடுகளை வெட்டி சித்ரவதை செய்துள்ளார். காசிமை தேடிய போலீஸார், அவர் ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு, மருத்துவமனையில் சேர்த்தனர், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.