வன்கொடுமைக்குள்ளான சிறுமியை வன்கொடுமை செய்த போலீஸ்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேசத்தில் புகார் அளிக்க சென்ற சிறுமியை காவலரே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் லலித்பூர் நகரை சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த சில நாட்கள் முன்னதாக காரில் கடத்தி சென்ற மர்ம கும்பல் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்த லலித்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திலக்தாரி சரோஜ், சிறுமியை விசாரிக்க வேண்டுமென காவல் நிலையம் வர சொல்லியுள்ளார்.
இதனால் சிறுமியை உறவினர் ஒருவரோடு பெற்றோர் காவல் நிலையம் அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியை தனியாக விசாரிக்க வேண்டும் என தனி அறைக்கு அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.