செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (17:32 IST)

கொரோனாவை அடுத்து தீவிரமாக பரவும் ஹண்டா வைரஸ்: இதுவும் சீனாவில் இருந்தா?

கொரோனா வைரஸ் அச்சத்தில் இருந்தே இன்னும் மனிதகுலத்தை காப்பாற்றா மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் மனித உயிர் இந்த வைரஸால் பலியாகி  வருகிறது.
 
இந்த நிலையில் சீனாவில் ஹண்டா  என்னும் புதிய வைரஸால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய சமூக வலைத்தளத்தில் ஹண்டா வைரஸ் தான் டிரெண்டிங்
 
பலியான நபர் சீனாவை சேர்ந்தவர் என்பதால் இந்த வைரஸூம் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவுமோ என்ற அச்சம் தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் பயப்படும் அளவுக்கு ஹண்டா வைரஸ் சீரியஸ் ஆனது இல்லை என்றும் இந்த வைரஸ் 1976ல் இருந்தே உள்ளது என்றும் இது எலி மூலம் உருவாகும் வைரஸ் என்றும் இதுவொரு தொற்று வைரஸ் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மீண்டும் ஒரு புதிய வைரஸ் குறித்து யாரும் வதந்திகள் கிளப்பி மக்களை பீதியடைய செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.