உனக்கு மொதல்ல கொரோனா வரணும்... கிளாமர் போட்டோ வெளியிட்டு என்ஜாய் பண்ண சொல்லும் மீரா மிதுன்!

papiksha| Last Modified செவ்வாய், 24 மார்ச் 2020 (15:46 IST)

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசுவதும், யாரும் பார்க்க விரும்பாத கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதுமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அரைகுறை ஆடை ஒன்றை அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "வீட்டில் இருந்தபடியே எனது கிளாமர் புகைப்படத்தை என்ஜாய் பண்ணுங்க" என கூறியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் வாந்தி வருது... என கழுவி ஊற்றி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :