வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (13:36 IST)

பெற்ற மகனை கொன்று பல துண்டுகளாக வெட்டிய தாய்! திடுக்கிடும் சம்பவம்...

ரஷ்யாவில் வசித்து வரும் லுயிட்மிலா என்ற பெண் சில நாட்களுக்கு முன் தன் கையில் ஒரு பையுடன் ஒரு 'கால் டாக்ஸிக்காகக்' காத்திருந்தனர். அப்போது அருகில் வசிப்போருக்கு அழுகியதைப் போன்ற துர்நாற்றம் வீசியதால் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
அப்போது, அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் லுயிட்மிலாவின் கையில் இருந்த பையை பறிமுதல் செய்து அதை திறந்து பார்த்தனர். அப்போது மனித கை, கால் போன்ற பாகங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 
பின்னர் போலீஸார் லுயிட்மிலாவிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:
 
அன் மகனை விட்டு அவனது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதிலிருந்து தினமும் குடித்து வந்து என்னை அடித்து துன்புறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் என்னை கழிவறையில் வைத்து துன்புறுத்த முயன்றான், அவனது சித்ரவதை தாங்க முடியாமல் சமைக்கும் பாத்திரத்தை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன். பின்னர் அவனது உடலுறுப்புகளை  பல துண்டுகளாக வெட்டி  ஒரு பையில் போட்டுக் கொண்டு வெளியில் கொட்ட நினைக்கும் போது மாட்டிக் கொண்டேன் இவ்வாறு  கூறியிருக்கிறார்.
 
இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.