செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (11:18 IST)

தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த மகன்

மூட நம்பிக்கையால் இறந்த தாயின் உடலுடன் மகன் 18 நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த மைத்ரேயன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சில வருடங்களுக்கு முன்னர் வீட்டில் நடைபெற்ற தீவிபத்தில் இறந்து போனார். தந்தையின் ஞாபகத்திற்காக பாழடைந்த வீட்டை சீர் செய்யாமல் தனது தாயுடம் மைத்ரேயன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் வயது முதிர்ச்சியின் காரணமாக மைத்ரேயனின் தாயார் கடந்த 18 தினங்களுக்கு முன்னர் இறந்துபோனார். ஆனால் அவரது தாயை புதைக்காமல் இருந்துள்ளார் அவர். 21 நாட்கள் கழித்து தாயின் உடலை புதைத்தால், அவர் மேலுலகில் நன்றாக இருப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு.
 
இதுகுறித்து போலீஸாருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்மணியின் உடலை மீட்டனர். மேலும் மைத்ரேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.