வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (16:18 IST)

இளம் பெண்ணை கொன்று பிணத்துடன் உடலுறவு கொண்ட சிறுவன் : பகீர் சம்பவம்

புதுச்சேரி மாநிலத்தில் குயவர் பாளையத்தை சேர்ந்தவர் அம்சபிரபா (25) வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீர்ரென்று அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண் ஒருவர் பூட்டிய வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.முக்கியமாக அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.அதில் பதிவான ஒரு சிறுவன்(17) மீது சந்தேகம் அடைந்தனர். 
 
இதனையடுத்து போலீஸார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போதுதான் உண்மை தெரியவந்தது . அம்சபிரபா வீட்டின் அருகே வசித்து வந்திருக்கிறான் அந்த சிறுவன். தன் வீட்டில் செல்லமாக ஒரு புறாவையும் வளர்த்து வந்துள்ளான். கொலை நடந்த அன்று சிறுவனின் புறாவானது அம்சபிரபா வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளது. 
 
அந்தப் புறாவை பிடிக்க  சென்ற போது அங்கிருந்த அம்சபிரபா சிறுவனை திட்டியதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கீழே இருந்த செங்கல்லை எடுத்து அவரின் தலையில் அடித்துள்ளான். அதில் மண்டை உடைந்து அம்சபிரபா சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்தார். அதன் பின்னும் கோபம் அடங்காத சிறுவன் அம்சபிரபாவை வீட்டிற்கு இழுத்துச் சென்று கழுத்தை அறுத்து கற்பழித்துள்ளான்.
 
தன் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சிறுவன் இந்த கொலையை செய்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.