செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 அக்டோபர் 2018 (17:31 IST)

மனித மாமிசம் தின்ன முயன்றவர் கைது

உக்ரைன் நாட்டிலுள்ள சால்டிவ்கா நகரில்  தலையில்லாத போலீஸ்காரரின் உடலானது ஒரு அபார்ட்மெண்டுக்கு அருகே கிடந்துள்ளது பற்றி அருகே வசிப்பவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்
.
இதனையடுத்து போலீஸார் விரைந்து வந்து இந்த கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது  நடத்திய விசாரணையில் அவர்களுக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது அந்த சவத்திற்கு அருகிலேயே உடலை வெட்டிய கத்தியும் அவர்களுக்கு  கிடந்துள்ளது.
 
இது பற்றி போலீஸார் துப்பறிந்த போது கொலை செய்யப்பட்டவர் கடந்த 4 ஆம் தேதி இரண்டு பேருடன் இணைந்து குடித்துவிட்டு  தன் வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்தது.
 
இதனையடுத்து போலீஸார் அந்த இருவரின் வீட்டிற்கும் சென்று விசாரித்தனர் அப்போது தன் தந்தைக்கு எதிராக மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
அதன் பிறகு அவர்களின் வீட்டில் நர மாமிசம் ,மற்றும், கால் எழும்புகள் எல்லாம் சமையலறையில் உள்ள குக்கரில் வெந்து உண்பதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது.
 
இதனால்  முன்பு செய்த ஒரு கொலை வழக்கிலும் அந்த நபர் ( தந்தை) மீது  குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.