புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (15:44 IST)

ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன்  மீட்கப்பட்ட சில மணி  நேரங்களில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான்  நாட்டில் உள்ள ஜாபுள் மாகாணத்தில் ஒரு முதியவர் ஆழ்துறைக் கிணறு தோண்டுவதற்காக உதவிகள் செய்துள்ளார்.

அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் 25 மீட்டர் ஆழமுள்ள ஆழ்துளைக்  கிணற்றில் சிக்கிக் கொண்டான்.

உடனே, அந்தச் சிறுவனை மீட்கும் முயற்சியில் அங் அங்க்குள்ள மக்கள்  ஈடுபட்டனர். ஆனால்  சிறுவனை மீட்க முடியவில்லை; சம்பவ இடத்திற்கு மீட்புக் குழிவினர் வனது குழந்தையை சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டனர்.

சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.