வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (07:30 IST)

ஜாமினில் வெளிவந்த பிரபல நடிகர் கார் விபத்தில் மரணம்!

ஜாமினில் வெளிவந்த பிரபல நடிகர் கார் விபத்தில் மரணம்!
ஜாமீனில் வெளிவந்த பிரபல நடிகர் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகர் தீப்சிங் சித்து அவர்கள் இன்று டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
 
 டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் பேரணி நடந்தபோது கலவர வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தீப்சிங் சித்து சமீபத்தில்தான் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விவசாயிகள் கலவர வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தீப் சிங் சித்து திடீரென சாலை விபத்தில் மரணமடைந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது உண்மையான சாலை விபத்தா? அல்லது சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.