திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:07 IST)

விண்ணைத் தாண்டி வருவாயா பட நடிகர் மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கோட்டயம் பிரதீப்.

2001 ஆம் ஆண்டு வெளியான ஈ நாடு இன்னலே வரே என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் கோட்டயம் பிரதீப். அவரின் தனித்துவமான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இப்படி பல படங்களில் நடித்த அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது விண்ணைத்தாண்டி வருவாயா.

அந்த படத்தில் திரிஷாவின் மலையாள உறவினராக நடித்த அவர் சிம்பு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரோடு உரையாடும் காட்சி, வெகுவாகக் கவர்ந்தது. அதன் பின்னர் ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 61. அவருக்கு மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.