வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (21:54 IST)

ஓடும் ஆற்றில் விழுந்த பந்து ...சிறுமியை காப்பாற்றிய நாய் - வைரல் வீடியோ

பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த நதியில் விழுந்த பந்தை எடுப்பதற்காக ஒரு சிறுமி  முயற்சி செய்யும் போது ஒரு நாய் உதவி செய்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக பொதுவாகவே அனைவரும் நாய்களை வளர்ப்பார்கள் . நாய்கள் நன்றியுடையது என்பது நாம்  வளர்க்கும்போதுதான் தெரியும்.

இந்நிலையில் ஒரு சிறுமி கையில் வைத்து விளையாடி வந்த பந்து ஆற்றில் விழுகவே அதை எடுக்கும்போது, அருகில் நின்றிருந்த நாய் சிறும்னியை உடையைப் பிடித்து பின்னால் இழுத்துவிட்டு, அமரச் செய்து தானே ஓடிச் சென்று பந்தை எடுத்து வந்து கொடுத்தது.
இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.