செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2021 (19:16 IST)

மாஸ்ட் அணிய மறுத்த அதிபரின் செயல்…இணையதளத்தில் வைரல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் விகிதமும் இறப்பு விகிதமும் குறைந்துள்ள போதிலும் கொரொனா வைரஸின் இரண்டாம் அலையும் அதன் உருமாற்றத்தாலும் இன்னும் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அதனால் அனைத்து நாடுகளிலும் மாஸ்க் அணிவது மற்றும் சமூக விலகலைக் கடைபிடிக்கும் திட்டம் கடைபிடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெர்மனி அதிபர் அங்கெலா மெர்க்கெல் ஒரு பொதுநிகழ்ச்சியில் மாஸ்க் அணியாமல் கலந்துகொண்டார். அதை உணர்ந்த அவர் உடனடியாக மாஸ்க்கை அணிந்தார். இதுகுறித்த வீடியோ வைரல் ஆகிறது.

ஜெர்மன் நாட்டிலுள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அந்நாட்டு அதிபர் அங்கெலா மெர்க்கெல் , தான் மாஸ்க் அணியாமல் இருப்பதை தெரிந்துகொண்டதும் உடனடியாக அங்குள்ள போடியத்திற்குச் சென்று மாஸ்க் எடுத்து அணிந்தார். அவரது கடமை உணர்ச்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.