செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:58 IST)

சென்னையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்த தடை: காவல்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு நிபந்தனைகளும் ஒரு சில தளர்வுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் போராட்டம் நடத்த கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே சென்னையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவல்துறை ஆகஸ்ட் 12 முதல் 27 ஆம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை என உத்தரவிட்டு உள்ளது 
 
இதுகுறித்து காவல்துறை சற்றுமுன் கூறியபோது, ‘சென்னையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை பொதுக்கூட்டம் கூடுதல், ஆர்ப்பாட்டம் நடத்துதல், பேரணி நடத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் ஆகஸ்ட் 27 வரை எந்தவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது