கேட்ச் பிடிக்கும் போது நிகழ்ந்த விபரீதம்… 4 பற்களை இழந்த கிரிக்கெட் வீரர்!
ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இலங்கை வீரர் சமிதா கருண ரத்னேவுக்கு இந்த மோசமான விபத்து நடந்துள்ளது.
26 வயதான கண்டி ஃபால்கன்ஸ் அணி வீரர் புதன்கிழமை (டிசம்பர் 7) நடைபெற்ற ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் சீசனின் 4வது போட்டியின் போது காலி கிளாடியேட்டர்ஸ் வீரர் நுவனிடு பெர்னாண்டோ அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பயங்கர காயம் ஏற்பட்டது.
பந்து கருணாரத்னேவின் முகத்தில் விழுந்தது மற்றும் அவரது நான்கு பற்கள் உடைந்ததுடன் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விபத்து சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னரான தனது புகைப்படத்தை அவர் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.