1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (02:19 IST)

இந்தியாவை மிரட்டும் பயங்கரவாதி

இந்தியாவை மிரட்டும் பயங்கரவாதி

ஹிஸ்புல் முஜாகீதின்  பயங்கரவாத இயக்க தலைவன் சையது சலாஹூதின் பேட்டி அளிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில் பயங்கரவாதி கூறியிருப்பதாவது:- 


 


”காஷ்மீரில் நடைபெறும் சுதந்திர போராட்டத்துக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவு அளிக்கிறது. பாகிஸ்தான் வழங்கும் இத்தகைய உறுதியான ஆதரவால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத போர் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. காஷ்மீர் மக்களுக்கு உலக நாடுகள் துணை நிற்கிறதோ இல்லையோ அல்லது பாகிஸ்தானோ அல்லது ஐநா சபை துணை நிற்கிறதோ இல்லையோ, தங்கள் உடலில் இறுதி சொட்டு ரத்தம் இருக்கும் வரை  தங்கள் உரிமைக்காக போராட அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூன்று முறை போர் நடைபெற்றுள்ளது. காஷ்மீர் மக்கள் எத்தகய சமரசத்திற்கும் தயாராக இல்லாததால், நான்காவது போர் விரைவில் நடைபெறும்” என்றான்.