திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 29 ஜூன் 2025 (10:38 IST)

திருந்தவே மாட்டீங்கள்ல..? இந்தியா அழித்த பகுதிகளில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள்! பாகிஸ்தான் தந்திர வேலை!

India Pakistan

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் பாகிஸ்தான் கட்டியெழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. அதை தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் மூண்ட நிலையில் 4 நாட்கள் போருக்கு பிறகு போர்நிறுத்தம் ஏற்பட்டது.

 

இந்நிலையில் இந்தியா அழித்த பயங்கரவாத தளங்கள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்புவதற்கும், எதிர்காலத்தில் தாக்குவதற்கு ஏதுவாக எல்லையோர காட்டுப்பகுதிகளில் முகாம்களை அமைத்து வருவதாகவும், கவனம் ஈர்க்காத படி தொலைவாக சிறு சிறு முகாம்களாக அமைத்து வருவதாகவும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக பயங்கரவாதிகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பேசிய பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதியின் இறுதிச் சடங்களில் கலந்து கொண்டனர். தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவோடே பயங்கரவாத முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு செயலை தொடர்ந்து வரும் நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K