திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (18:19 IST)

வித்தியாசமான காரணத்திற்காக ஊழியர் பணி நீக்கம்!

sandwich
உலகில்  உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை அதிகளவில் பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஐடி நிறுவனத்தில் எப்போது ஆட்குறைப்பு  செய்யப்படுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.
 
இந்த நிலையில், லண்டனில் வித்தியாசமான காரணத்திற்காக பணிப்பெண்ணை  நிர்வாகம் பணி நீக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
 
லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில், அதிகாரிகள் மீதம் வைத்த சான்ட்விச்சை சாப்பிட்டதற்காக, தூய்மைப் பணியாளர் ஒருவர் பணி நீக்கம்   செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும், குப்பைகளை சுத்தம் செய்யப்படுவதால் எங்களை இப்படி நடத்த வேண்டாம் என தொழிலாளங்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
தூய்மை பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு   நிறப் பாகுபாடுதான் காரணம் எனக் கூறப்படும் நிலையில்,  பணிபுரிந்த நிறுவனத்தை எதிர்த்து அந்தப் பணியாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.