வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (13:05 IST)

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் இணையும் பிரபல ஹீரோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் சமீபத்தில் ’டிரிக்கர்’ என்ற  குறும்படம் இயக்கினார்.
 
இதையடுத்து,  நடிகர் விஜய்யின் மகன்   ஜேசன் சஞ்சயும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
 
தமிழ் சினிமாவின் புதிய இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் ஹீரோவாக பலரது பெயர் அடிபட்டது.   அதேபோல் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில்,  அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்ற தகவல் வெளியானது.
 
இந்த  நிலையில், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் மல்லுவுட் ஹீரோ துல்கர் சல்மான்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும்  நிலையில், ஜேசன் சஞ்சயுடன் இணையும் துல்கர் சல்மான் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
சினிமா மேக்கிங் மற்றும் டைரக்சன் பற்றி லண்டனின் படித்துள்ள ஜேசன் சஞ்சய், யாரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றாத நிலையில் இவரது முதல்  படத்தை லைகா பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதால் இப்படத்தில் நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.