1600 ஊழியர்களை அதிரடி பணி நீக்கம் செய்தது ‘நைக்’ ஷூ கம்பெனி.. அதிர்ச்சி தகவல்..!
கடந்த சில ஆண்டுகளாக உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான நைக் நிறுவனம் திடீரென 1600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைக் நிறுவனத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக லாபம் குறைந்து வருவதை அடுத்து நிதி நிலைமையை சரி செய்வதற்காக பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற ஷூ கம்பெனியான நைக் நிறுவனம் சக நிறுவனங்களின் போட்டி மற்றும் லாபம் குறைவு காரணமாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிகிறது
மேலும் பணம் வீக்கம் , பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாகவும் நைக் நிறுவனம் தற்போது செலவை குறைக்கும் வகையில் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது
முதல் கட்டமாக 1600 ஊழியர்களை பனி நீக்கம் செய்துள்ளதாகவும் நிலைமை சரியாகவில்லை என்றால் இன்னும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்றும் கூறியுள்ளது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
Edited by Mahendran