1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:19 IST)

தான்சானியாவில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி

தான்சானியாவில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்
 
தான்சானியா நாட்டில் உள்ள டார் ஏஸ் சலாம் என்ற பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்துள்ளது. இந்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
 
இதனால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்த மழை மே மாதம் வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.