1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (12:19 IST)

ராஜஸ்தானில் திடீர் கனமழை: 12 பேர் பலி

ராஜஸ்தானில் திடீர் கனமழை: 12 பேர் பலி
ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர், பரத்பூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது.
ராஜஸ்தானில் திடீர் கனமழை: 12 பேர் பலி
 
இந்த மழையால் அக்ரா- தோல்பூர் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் சேர்த்து மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
கனமழை தொடர்பாக இந்திய வானிலை மையம், வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த மோசமான வானிலை தொடரும் என தெரிவித்துள்ளது.