தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு
காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது “தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது தவிர, தெற்கு தமிழகம் முதல் தென் உள் கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
அதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு தொடர்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனத்த மழை பெய்யக்கூடும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.