திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (15:01 IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனை !பேசித் தீர்வு காணலாம் : இலங்கை எம்.எல்.ஏ. பேச்சு

தமிழ மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விரைவில் பேசி சுமூகமாக தீர்வு காணலாம் என இலங்கை முன்னாள் எம்.எல்.ஏ. சதாசிவம் பேட்டியளித்துள்ளார். நாகை ஆயக்காரன் ஆஞ்சனேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.
அப்போது சதாசிவம் கூறியதாவது: 
 
கடந்த 2009 ஆம் ஆண்டில் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக இருந்த போது  உள்நாட்டு யுத்தம் வந்ததால் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் என கூறமுடியாது .தற்போது தமிழக மீனவர்கள் இந்திய எல்லை தாண்டி இலங்கை பகுதிக்குள் வந்து மீன்பிடிக்கும் போது எங்கள் கடல் படையினரால் கைது செய்யப்படுகின்றனர் .இந்த விவகாரம் குறித்து விரைவில் தீர்வு காண்போம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.