1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (10:28 IST)

விடிவதற்கும் கம்பி நீட்டிய அமெரிக்கா; நெருங்கும் தலீபான்கள்! – பீதியில் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமான தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் தலீபான்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தன. இதற்காக ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்களும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தலீபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்ப பெறும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதன்படி தற்போது பக்ரம் விமான தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

பக்ரம் விமானதள சிறையில் சுமார் 5 ஆயிரம் தலீபான்கள் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா சென்று விட்டதால் பக்ரம் தளத்தை கைப்பற்ற தலீபான்கள் நெருங்கி வருவதாக ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.