அலைகள் மெல்ல வீசுதய்யா.. அமெரிக்க கொடி பறக்குதய்யா! – சாதனை படைத்த ஸுக்கெர்பெர்க் வீடியோ!

Marl Zuckerberg
Prasanth Karthick| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (17:45 IST)
அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி கடல் நடுவே அமெரிக்க கொடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் ஸ்கேட்டிங் செய்த வீடியோ சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 5ம் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் அமெரிக்கா முழுவதும் விழா கோலம் தரித்த நிலையில் மக்கள் வான வேடிக்கை நிகழ்ச்சிகளை கண்டும், விருந்துகளில் கலந்து கொண்டும் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் வித்தியாசமான முறையில் அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார். கடலில் ஸ்கேட்டிங் செய்த படியே அமெரிக்க கொடியை கையில் பிடித்தபடி அவர் செய்த சாகசத்தை ரெக்கார்ட் செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பதிவிட்டு 1 மணி நேரத்திற்குள்ளாக 5 லட்சம் பார்வைகளை கடந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mark Zuckerberg (@zuck)இதில் மேலும் படிக்கவும் :