1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rahul Gandhi Holds Review Meeting with Congress Lok Sabha MPs Ahead of Session Conclusion

காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

ராகுல் காந்தி
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களான காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இன்று ஒரு முக்கிய ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். 
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.
 
சமீபத்தில் அவையில் தேர்தல் சீர்திருத்தம், எஸ்.ஐ.ஆர். மற்றும் இண்டிகோ விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. 
 
இந்த சூழலில், கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் அவையில் விவாதிக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகள் குறித்தும், தற்போதுள்ள விவாதங்களின் நிலை குறித்தும் ராகுல் காந்தி ஆலோசித்தார்.
 
குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். விவாதத்தின்போது, தான் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் பதிலளிக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரங்களின் பின்னணியில், இன்றைய ஆய்வுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க!.. தவெக இனிமே வேறலெவல்!.. செங்கோட்டையன் மாஸ்!...